பிரியா ரமணி விடுதலை

 


இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் இணை அமைச்சரும் பத்திரிகையாளருமான எம்.ஜே. அக்பர் தன் மீது பாலியல் புகார் சுமத்திய பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து அவரை டெல்லி நீதிமன்றம் விடுவித்திருக்கிறது.

இந்த வழக்கில் தனக்கு சாதகமாக வந்த தீர்ப்புக்காகவும் தனக்காக சாட்சி சொல்ல முன்வந்த அனைவருக்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரியா ரமணி தெரிவித்தார்."பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக புகார் தெரிவித்த நானே குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டேன். இந்த தீர்ப்பு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள் வெளிப்படையாக பேசுவதற்கான ஊக்கத்தை தரும் என நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.Advertisement