அக்கரைப்பற்று தெற்கு ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்பட்டது.


 


வி.சுகிர்தகுமார் 0777113659  


அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முகமாகவும்
விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டும்  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது.

பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில்  ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் .கிரோஜாரனின் ஒத்துழைப்போடு சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடும் பணி முன்னெடுக்கப்பட்டது.

அக்கரைப்பற்று தெற்கு ஆலையடிவேம்பு பிரதேசங்களில் வெள்ள அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும் களவிஜயத்தின்போது அறிந்து கொண்ட வெள்ள நிலைமையினையும் கருத்தில் கொண்டுமே இத்தீர்மானம் பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் துறைசார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச சபை தவிசாளர் ஆகியோருடன் தொலைபேசியினூடாக மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னரே முடிவுகள் எட்டப்பட்டதுடன் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்பட்டது.

இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதுடன் வீதிகள் குடியிருப்புக்கள் என பல இடங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளமையும் இந்நிலை நீடித்தால் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது