காத்தான்குடி இளைஞனின் ஜனாசா நொச்சிமுனைப் பகுதியில் கண்டெடுப்பு


எம் .ஜே பஸ்லின்.

காத்தான்குடி ஆற்றில் மூழ்கிய இளைஞனின் ஜனாசா நொச்சிமுனைப் பகுதியில் கண்டடுக்கப் பட்டுள்ளது.


காத்தான்குடி முதலாம் குறிச்சி வாவியில் வியாழக்கிழமை (04.02.2021) அன்று முற்பகல் வாவியில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞனின் ஜனாஸா நாவற்குடா வாவியில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது...மஞ்சந்தொடுவாய் 19ஆம் வட்டாரம் ஹிழுறியா ஜூம்ஆ  பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய  இளைஞன் மீரா முகைதீன் முனாஸ்  வாவியில் தவறி விழுந்து காணாமல் போயிருந்தார்...


குறித்த இளைஞன் வாவியில் நிறுத்தப்பட்டிருந்த ஆழ்கடல் மீன்பிடி படகில் காணப்பட்ட வலையை ஒழுங்கு செய்வதற்காக சிறிய தோணி ஒன்றில் படகை நோக்கி சென்று கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போனமை குறிப்பிடத்தக்கதுAdvertisement