விழிப்பூட்டும் நடைப்பயிற்சி

 (சுகிர்தகுமார் 0777113659)


 
 


  இயந்திரமயமான மனித வாழ்வில் நாம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்கின்றோம் என்றால் உண்மையில், இது நபரொருவருக்குக் கிடைக்கும் அளப்பரிய செல்வமாகும்.
நல்ல ஆரோக்கியம் இல்லையெனில், வீட்டில் நோயாளியாக இருக்கும் ஒருவரால் செல்வச் செழிப்புடனும் நல்ல தோற்றப் பொலிவுடனும் திகழ முடியாது.
ஆகவே ஆரோக்கியமான வாழ்வொன்றைப் பேணுவதற்கு உடற்பயிற்சி என்பது முக்கியமானதாக கருதப்படுகின்றது. அதிலும் குறிப்பாக அலுவலகங்களில் இருந்து பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இப்பயிற்சி மிகவும் முக்கியமானது.
இதனை கருத்திற்கொண்ட அக்கரைப்பற்று த வோர்க்கர்ஸ் குறூப் எனும் பெயரில் ஒன்றிணைந்த அங்கத்தவர்கள் ((The Walkers Group)  உடற்பயிற்சியினால் உடல் ஆரோக்கியம் பேணுவோம் எனும் தொனிப்பொருளில் நடைப்பயிற்சி யோகாசனம் மூச்சுப்பயிற்சி போன்ற பயிற்சிகளை ஒன்றினைந்து நடாத்தி வருகின்றனர்.
இதன் ஒரு அங்கமாக மக்களை விழிப்பூட்டும் வகையில் இன்று நடைப்பயிற்சி ஒன்றினை ஏற்பாடு செய்து நடாத்தினர்.
அக்கரைப்பற்று நீர்ப்பூங்காவில் ஆரம்பமான நடைப்பயிற்சி அக்கரைப்பற்று மணிக்கூட்டுகோபுர சந்தியை அமைடந்து அங்கிருந்து மீண்டும் நீர்ப்பூங்காவை சென்றடைந்தது.
அங்கு பயிற்சியில் ஈடுபட்ட பின்னர் உடலுக்கு ஆரோக்கியமான இலைக்கஞ்சியினை உண்டு மகிழ்ந்தனர்.
இப்பயிற்சியில்; இன மத வேறுபாடின்றி அனைவரும் இணைந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


Advertisement