LK மீது சைபர் தாக்குதல்



இலங்கையில் பதிவு செய்யப்படும், .LK என முடியும் சில இணையதளங்கள் மீது இன்று (பிப்ரவரி 06) காலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக 'டாட் எல்.கே' இணையதள பதிவு நிறுவனம் தெரிவிக்கின்றது.

இன்று காலை முதல் .LK இணைய முகவரிகள் பல செயலிழந்ததாக .LK இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

சில இணையதளங்களின் முகவரிகளை, வேறு இணையதளங்களுக்கு செல்லும் வகையில் சிலர் மாற்றியிருந்ததாக அவர் கூறுகின்றார்.

எவ்வாறாயினும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு, கணினி அவசர பிரிவு ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, நிலைமையை வழமைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.