நிந்தவூர் உள்ளூர் அதிகாரிகளால் முடக்கம்r


 


எதிர்வரும்‌ இரு வாரங்களுக்கு நிந்தவூர்‌ பிரதேசம்‌ முற்றாக முடக்கப்படுகிறது! 


கொவிட்‌-19 நிந்தவூர்‌ பிரதேச செயலணி விசேட கூட்டத்தில்‌ இன்று தீர்மானம்‌.


(சிரேஷ்ட ஊடகவியலாளர் - ஏ.எல்‌.ஏ.றபீக்‌ பிர்தெளஸ்‌) 


கொவிட்‌-19 நோய்ப்‌ பரவல்‌ நிந்தவூர்‌ பிரதேசத்தில்‌ அதிகரித்து வருவதை 


உணர்ந்த “கொவிட்‌-19 தடுப்பு நிந்தவூர்‌ பிரதேச செயலணி” இன்றிலிருந்து 


எதிர்வரும்‌ இரு வாரங்களுக்கு நிந்தவூர்ப்‌ பிரதேசத்தை முற்றாக 


முடக்குவதற்குத்‌ தீர்மானித்துள்ளது. 


நிந்தவூர்‌ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர்‌ திருமதி.பறூஸா நக்பர்‌ தலைமையில்‌ இன்று (28) பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில்‌ இடம்‌ பெற்ற கொவிட்‌-19 நிந்தவூர்‌ பிரதேச செயலணி விசேட கூட்டத்தில்‌ மேற்படி தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது. 


இக்கூட்டத்தில்‌ கல்முனைப்‌ பிராந்திய உதவிப்‌ பொலிஸ்‌ அத்தியட்சகர்‌ பி.எம்‌.ஜயரத்ன, சம்மாந்துறை பொலிஸ்‌ பொறுப்பதிகாரி கே.டீ.எஸ்‌.ஜயலத்‌, நிந்தவூர்‌ பிரதேச செயலாளர்‌ ரி.எம்‌.எம்‌.அன்சார்‌, நிந்தவூர்‌ பிரதேச சபைத்‌ தலைவர்‌ எம்‌.ஏ.எம்‌.தாஹீர்‌, நிந்தவூர்‌ ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர்‌ திருமதி சஹிலா இஸ்ஸதீன்‌, பொதுச்‌ சுகாதாரப்‌ பரிசோதகர்கள்‌, விசேட செயலணி உறுப்பினர்கள்‌, மற்றும்‌ காரைதீவுநிந்தவூர்‌ படை முகாம்‌ உயரதிகாரிகள்‌ பலரும்‌ இக்கூட்டத்தில்‌ கலந்து கொண்டனர்‌. 


சுமார்‌ இரண்டு மணித்தியாலங்கள்‌ கலந்துரையாடல்கள்‌ இடம்‌ பெற்றன. இறுதியாக கொவிட்‌-19 எதிர்ப்பு நிந்தவூர்‌ பிரதேச செயலணி உறுப்பினர்களின்‌ வேண்டுகோளுக்கிணங்க பின்வரும்‌ தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்களை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர்‌ திருமதி.பறாஸா நக்பர்‌ ஊடகங்களுக்குத்‌ தெளிவுபடுத்தினார்‌. 


1. இன்றிலிருந்து இரு வாரங்களுக்கு நிந்தவூர்ப்‌ பிரதேசத்திலுள்ள (உணவகங்கள்‌ உட்பட )அனைத்துக்‌ கடைகளும்‌ பூட்டப்பட வேண்டும்‌. 2. பேக்கரிகள்‌ தமது பொருட்களை பொதி செய்து வினியோகிக்கலாம்‌. 


3. கோழி இறைச்சி, மாட்டிறைச்சிக்‌ கடைகள்‌ திறக்க முடியாது. (கிலோ, 1/2கிலோ என பொதி செய்து வினியோகிக்க முடியும்‌. 


4, மீன்‌ வியாபாரிகள்‌, மரக்கறி வியாபாரிகளுக்கு பாஸ்‌ நடை முறைப்படி விற்பனை செய்யலாம்‌. 


5. வெளி ஊர்‌ வியாபாரிகள்‌ எவரும்‌ இப்பிரதேசத்திற்குள்‌ நுளைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌. 


6.இச்சட்டங்களை மீறுவார்‌ தண்டனைக்குட்படுத்தப்படுவர்‌. 


News Nintavur TODAY