3000 ஆயிரம் வரையிலான சைனோபாம் தடுப்பூசிகளே முதற்கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு கிடைக்கலாம்


 


சுகிர்தகுமார் 0777113659 


  3000 ஆயிரம் வரையிலான சைனோபாம் தடுப்பூசிகளே முதற்கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு கிடைக்கலாம் என நம்பி;க்கை தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் இந்த பொன்னான வாய்ப்பை பிரதேச மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

நூறு வீதம் பாதுகாப்புடைய குறித்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஏனெனில் பலதரப்பட்ட சோதனைகள் தாண்டி உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் இலங்கை வைத்திய நிபுணர்; குழு ஆகியோரின் சிபாரிசின் அடிப்படையில் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமையவே குறித்த தடுப்பூசிகள் நமது நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரையில் பல இலட்சம் பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டும் உள்ளது. எனினும் இத்தடுப்பூசியினை பெற்றுக்கொண்டவர்களுக்கு எவ்வித பாரிய பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. இந்நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார பிரிவிலும் தடுப்பூசிகள் ஏற்றும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஆயினும் 26000 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு 3000 ஆயிரம் வரையிலான சைனோபாம் தடுப்பூசிகளே தற்போது கிடைக்கவுள்ளன. இந்நிலையில் முதற்கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 24 வாரங்களை தாண்டிய கர்ப்பிணிகள் நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் சுகாதார துறையினர் பிரதேச செயலகத்தில் மக்கள் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பிரதேச சபையினர் இராணுவத்தினர் என பல்வேறு தரப்பினர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.

அவ்வாறு கணக்கிடுகையில் 4000 இற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். ஆயினும் 3000 இ;ற்கும் உட்பட்ட தடுப்பூசிகளே முதலில் கிடைக்கவுள்ளன. இந்நிலையில் அரைவாசி பேருக்கே சிலவேளை தடுப்பூசிகள் வழங்கப்படலாம். ஆகவே தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள விரும்பும் மேற்கூறப்பட்ட பிரிவினுள் உள்ளவர்கள் தங்களது விபரங்களை மருத்துவமாது மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களிடம் முற்கூட்டி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இதில் அக்கரைப்பற்று-8ஃ1 8ஃ2 9 நாவற்காடு மற்றும் ஆலையடிவேம்பு பிரிவுகளில் வாழும் மக்களும் விசே;ட கவனத்தில் கொள்ளப்படுவர் என்பதுடன்
அடுத்த கட்டங்களில் ஏனையவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும் சந்தர்ப்பம் உள்ளது எனவும் கூறினார்.

இதேநேரம் அட்டாளைச்சேனை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள இரு வைத்தியசாலைகளும் கொரோனா சிகி;ச்சை நிலையமாக விரைவில் செயற்படவுள்ளதுடன் இதனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திறந்து வைக்கவுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.