ஓய்வூதியகாரர்களுக்கு உதவி புரிந்த படையினர்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


ஓய்வூதியகாரர்களை வங்கிகளுக்கு அழைத்துச் சென்று பணம் பெறுவதற்கு உதவிகளை இராணுவம் பொலிஸ் மற்றும் கடற்படையினர் உதவி வருகின்றனர்.

அம்பாரை மாவட்டம் கல்முனை , சாய்ந்தமருது, காரைதீவு  ,பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓய்வூதியம் பெறும் நபர்கள் வங்கிகளுக்கு சென்று தமது ஓய்வூதிய கொடுப்பனவுகளை வங்கிகளில் பெற்றுக் கொள்வதற்கு இராணுவத்தினர் பொலிஸார் கடற்படையினர் இணைந்து  அழைத்து செல்லும் நடவடிக்கை  வியாழக்கிழமை(10) மற்றும் வெள்ளிக்கிழமை(11) இரு நாட்களாக  இடம்பெற்று வருகின்றன.
 
மேற்குறித்த  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதர்களினால் பேரூந்து தொற்று நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஓய்வூதியகார்களுக்கு முகக்கவசம் மற்றும்  சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வங்கிகளுக்கு அழைத்துச் சென்று ஓய்வுதியம் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதன்போது  பொது சுகாதார பரிசோதகர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இராணுவத்தினர், பொலிஸார் ,கடற்படையினர்  என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.