டெவோன் நீர்வீழ்ச்சியில் யுவதியை தேடும் பணிகள் இன்று (22) நான்காவது நாளாகவும் முன்னெடுப்பு


 


(க.கிஷாந்தன்)

 

அட்டன் – பத்தனை, டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து காணாமல் போன யுவதியை தேடும் பணிகள் இன்று (22) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

எனினும் இதுவரை குறித்த யுவதி தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

டெவோன் நீர்வீழ்ச்சியில் நீரின் வேகம் அதிகரித்த காரணத்தினால் நேற்றைய (21) தேடுதல் நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் இன்று (22) காலை முதல் இராணுவத்துடன், பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து யுவதியை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 

நீர் வீழ்ச்சியின் அடிவாரத்தில் கடற்படை சுழியோடிகள் மேற்கொண்டு வரும் தேடுதலில் இதுவரை எந்தவித தடயங்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

நண்பர்கள் மூவருடன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்ற சந்தர்ப்பத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த யுவதி வழுக்கி வீழ்ந்து காணாமல் போயுள்ளார்.

 

லிந்துலை, லென் தோமஸ் தோட்டத்தைச் சேர்ந்த 19 வயது யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

 

காணாமல் போன யுவதியுடன் சென்ற நண்பர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

 

திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.