ஆலையடிவேம்பிற்கு இரண்டாம் கட்டமாக 5 ஆயிரம் தடுப்பூசிகள். தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வி.சுகிர்தகுமார் 0777113659  


  ஆலையடிவேம்பில் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார பதில் வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு இரண்டாம் கட்டமாக 5000 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நான்கு இடங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை அக்கரைப்பற்று இராமகிருஸ்ணமிசன் மகா வித்தியாலயம் கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உள்ளிட்ட நான்கு இடங்களில் தடுப்பூசிகள் ஏற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதில் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 12 வாரங்களை கடந்த கர்ப்பிணி தாய்மார்கள் மற்;றும் 60வயதினை கடந்தவர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்படுவதுடன் ஏனைய மூன்று நிலையங்களில் 30 வயதிற்கும் 60 வயதிற்கும் உட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொரோனா தொற்று குறைவடைந்து வரும் நிலையில் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவுகளுகு;க 140000 ஆயிரம்; தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இந்நடவடிக்கை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.