கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் நடவடிக்கை ஆரம்பம்
(சர்ஜுன் லாபீர்) 


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை எல்லைக்குட்பட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் மற்றும் ஏனைய விசேட நிலையங்களில் இன்று முதல்(24) கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


இவ் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி,பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,கல்முனை பிராந்திய தொற்று நோய் வைத்திய அதிகாரி என்.ரமேஸ்,கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி சுஜித் பியந்த உட்பட பலர் கலந்து கொண்டனர் 


இன்றைய ஆரம்ப தினத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட நிலையில் அரச அதிகாரிகள் ஆர்வத்துடன் தடுப்பூசி பெறுவதற்கு கலந்து கொண்டனர்