ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் தேசிய விளையாட்டு தினம்


 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  டங்கன் வைற் ஒலிம்பிக் போட்டியின்போது வெள்ளிப்பதக்கமொன்றை பெற்றுக்கொடுத்த ஐ{லை 31ஆம் திகதியை தேசிய விளையாட்டு தினமாக 2021ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த விளையாட்டுத்துறை அமைச்சினால் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று அரச அலுவலகங்களிலும் பல்வேறு நிகழ்;வுகள் இடம்பெற்றன.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் விளையாட்டு உத்தியோகத்தர் அ.ரிசாந்தனின் ஒழுங்கமைப்பில் அலுவலக உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் நிகழ்வுகள் சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற்றன.
தேசிய கொடியினை பிரதேச செயலாளர் ஏற்றி வைத்ததன் பிற்பாடு தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இதன் பிற்பாடு உரையாற்றிய பிரதேச செயலாளர் தேசிய விளையாட்டு தினத்தின் முக்கியத்துவம் தொடர்பாகவும் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கி வினைத்திறனும் உற்பத்தி திறனும் மிக்க மனிதவளத்தை உருவாக்குதே தேசிய விளையாட்டு தின பிரகடனத்தின் முக்கியத்துவம் எனவும் கூறினார்.
மேலும் எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியின் நஞ்சற்ற நாட்டை கட்டியெழுப்புவதன் நோக்கம் மற்றும் திட்டங்கள் தொடர்பிலும் விளக்கினார்.
இதனடிப்படையில் ஆரோக்கியமான உத்தியோகத்தர்களை உருவாக்குவதற்கும் வினைத்திறனான சேவையினை வழங்குவதற்கும் உடற்பயிற்சி மற்றும் நஞ்சற்ற உள்நாட்டு உணவுகளினதும் போசாக்கினதும் முக்கியத்துவம் தொடர்பாகவும் விளக்கினார்.
நிறைவாக பிரதேச செயலகத்தின் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தரும் கராத்தே கறுப்புப்பட்டி வீரருமாகிய கே.பி.ரவிச்சந்திரனினால் உடற்பயிற்சி செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
நிகழ்வுகளில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் க.பிரகஸ்பதி உள்ளிட்ட பதவி நிலை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.