தேசிய விளையாட்டு தின உடற்பயிற்சி நிகழ்வுகள்
(சர்ஜுன் லாபீர்,எம்.என்.எம் அப்றாஸ்) 


இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக இன்று(30) நாடு பூராகவும் தேசிய விளையாட்டு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 


அந்த வகையில் அரசாங்க உத்தியோகத்தர்களின் விளையாட்டு திறனையும்,உடற்பயிற்சி திறனையும் விருத்திசெய்யும் வகையில் இன்று(30) கல்முனை பிரதேச செயலகத்தில் உள்ள உத்தியோகத்தர்களுக்கான உடற்பயிற்சி நிகழ்வு கல்முனை பிரதேச செயலக கணக்காளர் யூ.எல் ஜவாஹீர் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலீஹ்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் றம்சான்,கிராம சேவை  நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல்.பதியூத்தீன்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்க யூ.எல் ரமீஸ்,உட்பட உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர் 


இந் நிகழ்வு இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அஸீம் மற்றும் விளையாட்டு பயிற்சிவிப்பாளர் எம்.என்.சபாயி ஆகியோரின்  பயிற்சி நெறிப்படுத்தலில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.