சிறுபோக நெல் அறுவடை


 


அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .


இம்முறை அம்பாறை மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டயர் விவசாய நிலப்பரப்பில் சிறுபோக வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது . நாவிதன்வெளி , அக்கரைப்பற்று , ஒலுவில் , நிந்தவூர் , அட்டாளைச்சே னை , சம்மாந்துறை , போன்ற பிரதேசங்களில் தற்போது அறுவடை நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

 தற்போது அம்பாறை மாவட்டத்தில் உலர்ந்த நிலையில் 60 கிலோகிரேம் நிறை கொண்ட ஒரு மூடை நெல் 3400.00 ரூபா தொடக்கம் 3800.00 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வரகின்றன . அறுவடை செய்த ஈரலிப்பான நெல் 3000.00 ரூபா தொடக்கம் தொடக்கம் 3400.00 ரூபா வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன .

 கொரோணா தொற்று நோயின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் விவசாயிகள் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருந்தது . இதனால் தற்போது விவசாயில் கூடுதலான அறுவடையை மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது என விவசாயிகள் தெரிவித்தனர்