கொரோனா விடுமுறைகாலத்தை பயன்படுத்தி வெற்றி கண்டார், பெண்


 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  பிளாஸ்டிக் மற்றும் அது தொடர்பான பொருட்களை மனித இனம் பயன்படுத்துவது தவிர்க்க இயலாத தோழமையாக இருந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் (நிலைகளிலும்) பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாத ஒன்றாகத் திகழ்கிறது.
இவற்றில் பிளாஸ்டிக் போத்தல்கள், பைகள், குவளைகள், சொப்பின் வாக், மற்றும் பஞ்சு போன்ற அட்டை ஆகியவைகள்; நமது சீரற்ற கலாச்சாரப்படி ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பின் தனியாக சேகரிக்கப்படாமல் குப்பைகளில் போடப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளை மறுமுறையும் பயன்படுத்த தரம் பிரிக்க வேண்டியுள்ளது
இதனை கட்டுப்படுத்தும் முகமாக நாடு முழுவதிலும் அரசினால் பல்வேறு நடவடிக்கைகள் மிக சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. எவரது வற்புறுத்தலிலும் அவை இடம்பெறவில்லை. தமது பிரதேசங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அப்பகுதி மக்கள் தாமே முன்வந்து இப்பணியில் இணைந்து செயற்படுகின்றனர்.
இதுபோல் சொப்பின் பாவனையும் கட்டுப்படுத்தப்பட்டது. ஆயினும் மிக சொற்ப காலமே அது நீடித்தது. மீண்டும் அந்த பாவனை கொஞ்சம் கொஞ்சமாக அருகிப் போய் மீண்டும் பழைய சொப்பிங் அல்லது பொலித்தீன் புழக்கத்துக்கு வந்துள்ளது.

இதற்கு மத்தியில் கடந்த கொரோனா காலகட்டத்தில் பலர் தமது வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். இக்காலத்தை கழிப்பதற்காக பலரும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டனர். சிலர் இக்காலத்தை சரியாக பயன்படுத்தினர். பலர் வீணே கழித்தனர்.  ஆனாலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 7ஃ4 பிரிவில் வாழும் திருமதி சாந்தி யோகேஸ்வரன்; என்பவர் கழிவுப்பொருட்களாக தேங்கி கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வீட்டு அலங்காரப்பொருட்களை தயாரிக்கும் பணியி;ல் ஈடுபட்டார்.

ஏற்கனவே இத்துறையில் ஓரளவு அனுபவம் கொண்ட அவர் கொரோனா விடுமுறைக்காலத்தை பயன்படுத்தி வீட்டிலிருந்தவாறே பிளாஸ்டிக் போத்தல்கள், ஜோக்கட் கப், பைகள், குவளைகள், சொப்பின் வாக், மற்றும் பஞ்சு போன்ற அட்டை ஆகியவற்றை கொண்டு வீட்டு கவர்ச்சியான அலங்காரப்பொருட்களை உருவாக்கியுள்ளார்.

ஆழகிய பூக்கள் பூமாலைகள் பைகள் பூச்சாடிகள் சொப்பின் பையினால் ஆன பூக்கொச்சைகள் என பலவகையான அலங்காரப்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மிகவும் கச்சிதாகவும் அழகாகவும் பார்க்கின்றவர்களை பிரமிக்க வைக்கும் அளவிற்கு அவரது கைவண்ணத்தில் உருவான  அலங்காரப்பொருட்கள் அமைந்துள்ளமை இங்கு சிறப்பம்சமாகும்.

ஆனாலும் கொரோனா நிலை காரணமாக அதனை காட்சிப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தலில் அவர் பல சிக்கல்களையும் எதிர்கொண்டுள்ளதுடன் வீட்டிற்குள்ளேயே அவற்றை பாதுகாத்தும் வைத்துள்ளார்.

இந்நிலையில் தனக்கான சந்தைப்படுத்தல் வசதி கிடைக்குமேயானால் எதிர்வரும் காலத்திலும் பாரிய அளவில் கழிவுப்பொருட்களை பயன்படுத்தி இன்னும் அதிகமான அலங்காரப்பொருட்கள உருவாக்குவதுடன் வருமானத்தை ஈட்டமுடியும் எனவும் ஏனயைவர்களும் இச்செயற்பாடுகளில் ஈடுபடும்போது பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் சூழல் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இச்செயற்பாட்டிற்கு தனது கணவரும் குடும்பமும் உறுதுணையாக இருந்ததாகவும் கூறினார்.