ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மாத்திரமே தற்போது பச்சை வலயத்தினுள் உள்ளது.


 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மாத்திரமே தற்போது பச்சை வலயத்தினுள் உள்ளது. இந்நிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும். அதற்காக மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார பதில் வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் கோரிக்கை விடுத்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு தொடர்பான தகவல்களை வழங்குகையில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் எமது பிரதேசம் ஓரளவு பாதுகாப்புடன் உள்ளமைக்கு பிரதான காரணம் சுகாதாரத்துறையினரின் அர்ப்பணிப்பான சேவையே என கூறினார். அத்தோடு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்பும் விழிப்பூட்டல் நடவடிக்கையும் மக்களின் ஒத்துழைப்பும் காரணமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலை தொடர வேண்டுமெனில் தொடர்ந்தும் மக்கள் அவதானத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதேநேரம் 50 ஆயிரம் தடுப்பூசிகள் கல்முனை பிராந்தியத்திற்கு சில தினங்களில் கிடைக்கவுள்ளதாகவும் இதில் சுமார் 3000 ஆயிரம் தடுப்பூசிகள் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு கிடைக்கும் எனவும் நம்பிக்கை வெளயிட்டார்.
இவ்வாறு கிடைக்கின்ற தடுப்பூசிகள் மூன்;று தினங்களுக்குள் மக்களுக்கு ஏற்றப்பட வேண்டும் எனவும் இச்சந்தர்ப்பத்தை  மக்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
குறித்த தடுப்பூசிகள் முதற்கட்டமாக 60 வயதினை கடந்தவர்களுக்கும் மற்றும் முன்னுரிமை படுத்தப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் கூறினார்.