அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க சிரேஸ்ட சட்டத்தரணி பாலமுனை சம்சுதீன் லோயர் மறைவு




பாலமுனையின் முதல் பட்டதாரி எம்.ஐ.சம்சுதீன் சட்டத்தரணி அவர்கள் இன்று வபாத்தானார்கள்..

பாலமுனையின் கல்வி முத்து -01

--------------------------------


**முழுப்பெயர்: முகம்மது இஸ்மாலெவ்வை சம்சுதீன்


**பிறந்த திகதி: 1940-09-05


**தந்தை: முகைதீன் பாவா முகம்மது இஸ்மாலெவ்வை


**தாய்: முக்கூல்தும்மா மீராசாகிப்


**முகவரி: 28, வட்டை வீதி, பாலமுனை-04 


**தொலைபெசி: 0672255011


**கல்வி:


ஆரம்பக்க் கல்வி- பாலமுனை ரோமன் கத்தோலிக்க பாடசாலை. (இப்போதைய அல்கிதாயா வித்தியாலயம்)


தரம் 06 தொடக்கம் எஸ் எஸ் சி வரை- நிந்தவூர் கணிஸ்ட ஆங்கில வித்தியாலயம். (இப்போதைய அல்அஷ்ரக் வித்தியாலயம்)  


உயர்தரம்- கல்முனை பாத்திமா கல்லூரி.


1960/61 இல் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்ச்சிக் கல்லூரியிலும் 1969/70 இல் பலாலி விசேட ஆசிரியர் பயிற்ச்சிக் கல்லூரியிலும் ஆசரியர் பயிற்ச்சி பெற்றார்.


1968 இல் பேராதெனிய பல்கலைக் கழகத்திற்கு கலைத்துறையில் தெரிவு செய்யப்பட்டு தொழில் நிமித்தம் செல்லவில்லை.


1971 இல் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக பீ எ பட்டம் பெற் றார்.


1981 இல் உள்வாரியாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் டிப்ளோமா பெற்றார்.


1981 இல்  கொழும்பு சட்டக்க் கல்லூரி சென்று சட்டத்தரணி ஆனார். 


1986 இல் கொழும்பு பல்கலைக் கழகத்தில் வெளிவாரியாக எல் எல் பி பட்டம் பெற்றார்.


**தொழில்:


1957 தொடக்கம் 1979 வரை பல பாடசாலைகளில் ஆசிரியராக பணிபுரிந்தார். பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம், மன்னார் பெரிய மடு முஸ்லிம் வித்தியாலயம், பானதுரை அல்பஹ்ரியா மகா வித்தியாலயம், பொலன்னறுவ முஸ்லிம் மகா வித்தியாலயம், பாதுக்கை முஸ்லிம் வித்தியாலயம், கொழும்பு கிரீன் வீதி முஸ்லிம் வித்தியாலயம், வெலிகம அரபா மகா வித்தியாலயம், கொழும்பு கிரேன்ட் பாஸ் அல் நசார் முஸ்லிம் வித்தியாலயம், கொட்டகென மத்திய கல்லூரி. 


1979 தொடக்கம் 1981 வரை ஒலுவில் அழ ஹம்ரா மகா வித்தியாலய அதிபராக இருந்தார். 


1987 தொடக்கம் 2000 வரை கொழும்பிலும் கொழும்பு துறைமுகத்திலும் குற்றவியல் சட்டத் தரனியாக கடமை புரிந்தார்.


2000 தொடக்கம் 2010 வரை மகியங்கனை நீதவான் நீதி மன்ற சட்டத்தரணிகள் சங்க தலைவராகவும் சட்டத்தரணியாகவும் இருந்தார்.


2001 தொடக்கம் 2010 வரை நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பதில் நீதவானாகவும் நியமிக்கப் பட்டார்.


2011 தொடக்கம் அக்கரைப்பற்றில் சட்டத்தரணியாக கடமை புரிந்து கொண்டிருக்கிறார்.


**சிறப்பு: 


பாலமுனை இன் முதலாவது பயிற்ச்சி பெற்ற ஆசிரியர்.


பாலமுனை இன் முதலாவது பட்டதாரி.


பாலமுனை இன் முதலாவது சட்டத்தரணி.


1957 இல் பாலமுனை இல் ஆரம்பிக்கப்பட்ட மின்ஹாஜ் மகா விதியாலத்தின் ஆரம்ப ஆசிரியர். ( இவர் ஆசிரியராகவும் நிந்தவூரை சேர்ந்த எஸ் எச் எல் கபூர் அதிபராகவும் இருந்தனர்)  


தகவல் தொகுப்பு: Dr.எஸ் எம் ரிபாஸ்தீன்.