இன்று, டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் மாபெரும் ஆரம்ப நிகழ்வு


 


டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் மாபெரும் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று ஒலிம்பிக் தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை 200 க்கும் அதிகமான நாடுகள் பங்குபற்றும் மாபெரும் விளையாட்டு தொடர் இதுவாகும்.

இந்த ஆண்டு 32 ஆவது தடவையாக ஒலிம்பிக் தொடர் இடம்பெறுகிறது.

இந்த ஆண்டு ஜப்பான் இரண்டாவது முறையாக ஒலிம்பிக் தொடரை நடாத்துகிறது.

முன்னதாக 1964 ஆம் ஆண்டு ஜப்பானில் ஒலிம்பிக் தொடர் இடம்பெற்றிருந்தது.