கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தின் 3ஆம் வாசிப்பு , இடம்பெறாது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தின் 3ஆம் வாசிப்பு விவாதத்தை வௌ்ளிக்கிழமை (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்போவதில்லையென, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றில் இன்று அறிவித்தார்.

குறித்த சட்டமூலம் வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளபடுமா என்பது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே சமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்ததோடு, அதற்கு இன்னும் காலம் எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சட்டமூலம் இலவசக் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்துமென பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.