தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உப காரியாலயம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இன்று திறந்து வைக்கப்பட்டது


 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உப காரியாலயம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இன்று திறந்து வைக்கப்பட்டதுடன் 5 பேருக்கான குடிநீர் இணைப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் யாவருக்கும் குடிநீர் எனும் எண்ணக்கருவிற்கு அமைவாக சகல கிராமங்களும் குடிநீர் இணைப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் குறித்த உப அலுவலகம் அக்கரைப்பற்று-08 ஆம் பிரிவில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கமைய திறந்து வைக்கப்பட்டது.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் யு.கே.எம். முஸாஜித்  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்; மற்றும் பிரதேச பொறியியலாளர் எம்.நசார்,  இயக்குதல் மற்றும் பராமரிப்பு பொறியியலாளர் பி.மயூரதன்,  நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அக்கரைப்பற்று அலுவலகத்தின் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஏ.எம்.சஹீம், பிரதேச செயலக கணக்காளர் க.பிரகஸ்பதி,  சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன், சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையி;ன் சிரேஸ்ட சமூகவியலாளர் எம்.எஸ்.எம்.சறூக் உள்ளிட்;ட கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வாரத்தின் புதன்கிழமை தோறும் குறித்த அலுவலகத்தின் ஊடாக பொதுமக்கள் குடிநீர் இணைப்பு தொடர்பில் தேவையான சகல நடவடிக்கையினையும் பூர்த்தி செய்ய முடியும் என இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய மக்களது காலடிக்கு சேவைகளை கொண்டு செல்லும் நோக்கோடு இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் வி.பபாகரன் குறிப்பிட்டதோடு குறித்த உப அலுவலகத்தை திறப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்ட நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

நிகழ்வில் புதிய குடிநீர் இணைப்பை பெறுகின்றவர்களுக்கான விண்ணப்பங்கள் அதிகாரிகளினால் கையளிக்கப்பட்டதுடன் குடிநீர் இணைப்பிற்காக விண்ணப்பித்த 5 பேருக்கு இணைப்பும் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த உப அலுவலகத்தின் மூலம் 8400 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மை அடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.