ஆலையடிவேம்பில் 81.8 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர்


 


வி.சுகிர்தகுமார் 0777113659


ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில்; நேற்றுடன் (31) 30 வயதிற்கு மேற்பட்ட 11183 பேர் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளதுடன் தடுப்பூசி பெற தகுதியானவர்களின் எண்ணிக்கையில் இத்தொகை 81.8 வீதமாக காணப்படுகின்றது.
இரண்டாம் கட்டமாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்றுடன் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்  தடுப்பூசியினை பெற்றுக்கொண்டதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார பதில் வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கை தூர பிரதேச மக்கள் நலன் கருதி நடமாடும் சேவை மூலமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது  இதற்கமைவாக நேற்று கண்ணகிகிராமத்திலும் இன்று அலிக்கம்பை கிராமத்திலும் இச்சேவை; இடம்பெறுவதாக அவர் கூறினார்.
தூர பிரதேசங்களில் வாழும் மிகவும் கஸ்டமான மக்களின் நலன்கருதியே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணனின் ஆலோசனையின் பிரகாரம் நடமாடும் சேவை இடம்பெறுவதாகவும் இதன் மூலம் மக்கள் இலகுவான முறையில் தடுப்பூசியினை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் மேலதிமாக தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதன் பிற்பாடே ஏனைய நான்கு இடங்களில் தடுப்பூசிகள் ஏற்றப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கைகளில் வைத்தியர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தாதியர்கள் குடும்பநல உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கடமையாற்றி வரும் நிலையில் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து பொதுமக்களை பதிவு செய்தல் மற்றும் ஒழங்குபடுத்தல் விழிப்பூட்டல் நடவடிக்கைக என பல்வேறு செயற்பாடுகளில் முற்றும் முழுதாக ஈடுபட்டு வருகின்றனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவுகளுகு;க 140000 ஆயிரம்; தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இந்நடவடிக்கை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.