கொவிட் தொழில்நுட்ப குழுவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் விலகினார்


 


சுகாதார அமைச்சின் கொவிட் தொடர்பான தொழில்நுட்ப குழுவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம பதவி விலகியுள்ளார்.


அவரது இராஜினாமா பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.