தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வேலைத்திட்டம்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) சமுர்த்தி குடும்பங்களின் பொருட்டு நடைமுறைப்படுத்தப்படும் செளபாக்கியா தேசிய வீட்டுத்தோட்ட பயிர்செய்கை வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது.

இதனடிப்படையில் அம்பாறை மாவட்டம்    சம்மாந்துறை  பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட   சமூர்த்தி வங்கி நான்கு வலயங்களிலும்  தெரிவு செய்யப் பட்ட சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும்  விதை பக்கட்கள்  வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று (09)  சம்மாந்துறை சமூர்த்தி தலைமை பீட முகாமையாளர் யு.எல்.எம் சலீம் தலைமையில்  இடம் பெற்றது.

இந் நிகழ்வில் அதிதிகளாக சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம்,சம்மாந்துறை பிரதேச செயலக  கணக்காளர் ஐ.எல் பாரிஸ்,திட்ட முகாமையாளர், வலய முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்களின் ஆகியோர் கலந்து கொண்டு  விதை பக்கெட்டுகள்  மற்றும் தென்னங் கன்றுகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.