சமுர்த்தி பயனாளிகள் மூலமாகவும் சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்


 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கிய நாடு எனும் திட்டத்தின் கீழ் சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் நாடளாவீய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி பயனாளிகள் மூலமாகவும் சேதனப்பசளை தயாரிக்கும் பணி மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரைப்பற்று 7ஃ4 ஆம் பிரிவில் வாழும் ரஞ்சன் எனும் பயனாளி சேதனப்பசளை தயாரிக்கும் திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார்.

பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகரின் பணிப்புரைக்கமைவாக தலைமையக சமுர்த்தி முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் வலய முகாமையாளர் எஸ்.சுரேஸ்காந் மேற்பார்வையில் பிரிவு உத்தியோகத்தர் டி.எம்.சமந்த திசாநாயக்க பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.யோகநாயகி ஆகியோரின் கண்காணிப்பில் இன்று புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த பயனாளியின் சேதனப்பசளை தயாரிக்கும் பண்ணையில்
ஒரு புறத்தே மாடு வளர்ப்பு திட்டமும் மறுபுறத்தே கோழி வளர்ப்பும் அதேபோல் கிளிசறியா மர வளர்ப்பும் இடம்பெறுவதுடன் வைக்கோல் மற்றும் ஆற்றுவாளையும் சேகரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த பயனாளி பண்ணையின் முன்பகுதியில் கௌபி செய்கையினையும் சேதனப்பசளையை பயன்படுத்தி மேற்கொண்டு வருகின்றார்.

இவ்வாறு பல்வேறுபட்ட தொழில் முயற்சிகளை மேற்கொண்டுவரும் பயனாளி ரஞ்சன் சேதனப்பசளை தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

அவரது முயற்சிக்கு சமுர்த்தி திட்டத்தினூடாகவும் பல்வேறு உதவிகளை வழங்க ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க