நிந்தவூர் பிரதான வீதியில் சற்று சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து !


 


நூருள் ஹுதா உமர்


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் சொகுசு கார் ஒன்று  மோட்டார் சைக்கிளுடன்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது


இச்சம்பவம் இன்று 17 மாலை 3.25 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.


இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.