திருக்கோவில் சமுர்த்தி பிராந்திய கணக்காய்வு பிரிவு அலகிற்கான காரியாலயம் திறந்து வைப்பு



 

வி.சுகிர்தகுமார் 0777113659  

 

சமுர்த்தி திட்டத்தின் மற்றுமொரு மைல்கல்லாக பட்டதாரிகளையும்; உள்வாங்கிய பிராந்திய கணக்காய்வு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு அவ் அலகிற்கான காரியாலயங்களும் அம்பாரை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.


இதற்கமைவாக முதற்தடவையாக ஆலையடிவேம்பு பொத்துவில் திருக்கோவில் ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய திருக்கோவில் பிராந்திய கணக்காய்வு பிரிவு அலகிற்கான காரியாலயம் உருவாக்கப்பட்டு அதனை திறந்து வைக்கும் நிகழ்வும் இன்று நடைபெற்றது.
அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தரும் உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தரும் நிலையப் பொறுப்பதிகாரியுமான ஏ.கே.பௌசல் அமீன் தலைமையில் இடம்பெற்ற அலுவலக திறப்பு விழா நிகழ்வில் அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் காரியாலய பெயர்பலகையினை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து அலுவலக வளாகத்தில் மரநடுகை இடம்பெற்றதுடன் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

இதன் பின்னராக சமய அனுஸ்டானம் இடம்பெற்றதுடன் தலைமை உரையும் உத்தியோகத்தர்கள் அறிமுக நிகழ்வும் காரியாலய நிலை தொடர்பான அறிக்கை சமர்ப்பித்தலும் நடைபெற்றது.

நிறைவாக உதவிப்பிரதேச செயலாளர் உரையாற்றியதுடன் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரும் உரையாற்றினார்.

அவரது உரையில் மிகவும் சிறப்பாக பிராந்திய கணக்காய்வு பிரிவு அலகை ஆரம்பிக்க பாடுபட்ட பொறுப்பதிகாரி உள்ளிட்ட உத்தியோகத்தர்களை பாராட்டியதுடன் உதவியினை வழங்கி திருக்கோவில் பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
 மேலும் குற்றங்களை கண்டு பிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதைவிட எதிர்காலத்தில் அவ்வாறு குற்றம் புரியாமல் எவ்வாறு சிறப்பான சேவையை வழங்கலாம் என ஆலோசனை வழங்கி அவர்களையும் அரவணைத்து செல்வதே குறித்த பிரிவின் முதற்பணி எனவும் கூறினார்.