சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாளிலேயே, அத்தினத்தை கருப்பு நாளாக அறிவித்துஅட்டன் நகரத்திலும் போராட்டம்


 


(க.கிஷாந்தன்)

சம்பள முரண்பாடு, நிலுகைக் கொடுப்பனவுகள் உட்பட மேலும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைகோரி அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாளிலேயே, அத்தினத்தை கருப்பு நாளாக அறிவித்து, தமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் அதிபர், ஆசிரியர்கள் இன்று தொழிற்சங்க போரோட்டத்தில் இறங்கினர்.

அந்தவகையில், அட்டன் நகரத்திலும் அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


அட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.