அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும் தீபாவளி பூஜை



 


வி.சுகிர்தகுமார் 0777113659 

 உலகவாழ் இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இம்முறை இலங்கை வாழ் இந்து மக்களாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்ட மக்களும் தீபாவளியினை சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கொண்டாடி வருகின்றனர்.
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும் ஒரு சில பக்தர்களின் பிரசன்னத்தோடு வழிபாடுகள் இடம்பெற்றது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் பூஜை வழிபாடுகளை நடாத்தி வைத்தாhர்.
இதேநேரம் நரகாசூரன் எனும்  மகா கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் வதம் செய்து அழித்தொழித்த பெருமைக்குரிய இத்திருநாளில் வேற்றுமை அகன்று நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் எனவும் கொரோனா எனும் கொடிய அரக்கன் நம் நாட்டில் இருந்து அழிந்து போகவேண்டும் எனவும் அமைதியான முறையில் பிரார்த்தனை வழிபாடுகளிலும் மக்கள் ஈடுபட்டனர்.
பின்னர் பிரதமகுரு உள்ளிட்ட பெரியோர்களிடம் சிறியவர்கள் ஆசீர்வாத்தினை பெற்றுக்கொண்டனர்.