இனங்களுக்கிடையிலான நல்லிணக்க செயற்பாடுகளை இளையோர்கள் மத்தியில் முன்னெடுப்பு



 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  இனங்களுக்கிடையிலான நல்லிணக்க செயற்பாடுகளை இளையோர்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லுதல் தொடர்பான செயற்றிடத்தின் கீழ் பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் ஏற்பாடு செய்த முழுநாள் பயிற்சி செயலமர்வு தம்பட்டை சுவாட் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இளையோர்கள் மத்தியில் இன நல்லிணக்கம் சார்ந்து அவர்களது பங்களிப்பினையும் ஒத்துழைப்பினையும் மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற செயலமர்வில் பல்லின மத இளையோர்களும் பங்கேற்றனர்.
பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் இணைப்பாளர் வாணி சைமன் மற்றும் திட்ட இணைப்பாளர் ந.சுமந்தி ஆகியோரின் தலைமையில் யுஎன்டிபி நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் இடம்பெற்ற செயலமர்வில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய ஒருங்கிணைப்பாளர் ஏ.சி.அப்துல் அசீஸ் வளவாளராக கலந்து கொண்டு பயற்சி செயலமர்வை நடாத்தி வைத்தார்.
இரு கட்டங்களாக இடம்பெற்ற பயிற்சி செயலமர்வில் குழுச் செயற்பாடுகளும் இடம்பெற்றன.
நல்லிணக்கம் தொடர்பில் இளையோர் மத்தியில் அறிந்து வைத்துள்ள விடயங்களை அவர்கள் மூலமாவே அறிந்து கொண்டதுடன் நல்லிணக்கம் என்றால் என்ன? அதனை எவ்வாறு சாத்தியமாக்க முடியும். அதில் இளையோரின் பங்களிப்பு என்ன என்பது தொடர்பில் பயிற்;சி அளிக்கப்பட்;டது.
மேலும் முரண்பாடு என்றால் என்ன? அது எவ்வாறு உருவாகின்றது. அதில் இருந்து எவ்வாறு மீள்வது போன்ற விடயங்களும் தெளிவூட்டப்பட்டன.