அம்பாரை மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் மகாசிவராத்திரி



 


வி.சுகிர்தகுமார் 0777113659  

  அம்பாரை மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் மகாசிவராத்திரி விசேட சிறப்பு பூஜைகள் இன்று நடைபெற்று வருகின்றன.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிகவும் குறைந்தளவான பக்தர்களே விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும் விசேட பூஜைகள் நடைபெற்றுவருவதுடன் சிவலிங்கப்பெருமானுக்கும் அபிசேக பூஜைகள் இடம்பெற்றன.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் தலைமையில் பூஜைகள் இடம்பெற்று வருவதுடன் விரதம் அனுஸ்டிக்கும் அடியவர்களும் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேநேரம் அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் திருக்கேதீஸ்வரம் திருக்கோணஸ்வரம் உகந்தை முருகன் ஆலயம் என பெயர் பெற்று விளங்கும் பல்வேறு ஆலயங்களுக்கும் அதிகளவான பக்தர்கள் விரதம் அனுஸ்டிப்பதற்காக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.