(காரைதீவு சகா )
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தையொட்டி அம்மனுக்கு தாலிக்கு பொன் உருக்குதல் நிகழ்வு இன்று (17)பௌர்ணமி தினம் முற்பகல் 11 மணி அளவில் நடைபெற இருக்கின்றது.
sஆலயத்தில் இந்த பொன் உருக்கும் நிகழ்வு ஆலய தலைவர் கே.ஜெயசிறில் முன்னிலையில் நடைபெற இருக்கின்றது.
தாலிக்கு பொன் உருக்குதல் நிகழ்வில் நிர்வாக சபையினரும் பக்த கோடிகளும் கலந்து கொள்ளலாம்.
அதேவேளை பிற்பகல் 3 மணியளவில் கும்பாபிஷேகத்துக்கான ஆலய பரிபாலன சபை கூட்டம் நடைபெற இருக்கின்றது .

Post a Comment
Post a Comment