ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 54 பவுண் தங்க நகைகள் கொள்ளை



 


வி.சுகிர்தகுமார்    எஸ்.ரி.ஜமால்டீன்


  அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இன்று அதிகாலை 1 மணிக்கும் 5 மணிக்கும் இடையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் 54 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது என முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
ஆசிரியரும் அவரது மனைவியும் அவர்களது ஒரு வயது பெண் குழந்தையும் வீட்டின் ஒரு அறையில் தூங்கி கொண்டிருக்கும் போது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் மூவரும் தூங்கி nhண்டிருந்த அறையை பூட்டிவிட்டு மற்றய அறையை திறந்து அங்கிருந்த அலுமாரியை உடைத்து அலுமாரியில் இருந்த வீட்டுஉர்pமையாளர் அவரது தாயார் சகோதரி என மூவரின் மூன்று தாலிக்கொடி அடங்கலாக 54 பவுண் தங்க நகைகளை திருடிசென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது ஒருவயது குழந்தைக்கு இன்று பிறந்த நாள் கொண்டாடும் எண்ணத்துடன் பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவிட்டு தூங்கியர்கள் காலை 5 மணிக்கு எழும்பி கதவை திறக்க முற்பட்டுள்ளனர். ஆயினும்  கதவு திறக்காதபடி பூட்டப்பட்டிருந்ததையறிந்து சத்தம் போட்டு அயலவர்களை அழைத்து வெளியே வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடப்பதையும் அலுமாரியில் இருந்த நகைகள் காணாமல் போனதையும் அறிந்துள்ளனர்.
அதனையடுத்து அக்கரைப்பற்று பொலிசாருக்கு தகவலை வழங்கியதையடுத்து  அக்கரைப்பற்று பொலிசார்,அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர்,அம்பாறை தடயவியல் விசாரணை பிரிவினர் என பல தரப்பினரும் சம்பவ இடத்துக்கு வகை தந்து  விசாரணைகளை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிசார் மேலதிக விசாரணைகளை மெற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதேநேரம் இரு நாட்களுக்கு முன்னரும் வீதியில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரின் மாலையை அறுக்க ஒருவர் முற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.