பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கடந்த ஒரு மணி நேரத்தில் வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 174 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த அமர்வை வழிநடத்தும் தலைவராக செயல்பட்ட பிஎம்எல்-என் கட்சியின் அயாஸ் சாதிக், வாக்கெடுப்பு முடிவை அறிவித்தார்.
பிஎம்எல்-என் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மரியம் ஔரங்கசீப்பின் கூற்றுப்படி, சாதிக் அமர்வுக்கு தலைமை தாங்கியதால் வாக்களிக்க முடியவில்லை. இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் அதிருப்தி உறுப்பினர்களும் வாக்களிக்கவில்லை
முன்னதாக, தனது ராஜிநாமாவை அறிவிப்பதற்கு முன், அமைச்சரவையில் இருந்து "முக்கியமான ஆவணங்களை" கிடைக்கப் பெற்றதாகக் கூறினார், அதை பார்க்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவரையும் பாகிஸ்தான் தலைமை நீதிபதியையும் கைசர் அழைத்தார்.
சபாநாயகர் பதவி விலகல்
"நமது சட்டம் மற்றும் தாய்நாட்டுக்காக நிற்கும் நோக்கத்துடன், சபாநாயகர் பதவியில் நீடிக்க முடியாது என்று முடிவெடுத்து எனது பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளேன்,'' என்று அவர் கூறினார்.
இது ஓர் தேச கடமை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்பதால், அவையை வழிநடத்தும் குழுவில் உள்ள அயாஸ் சாதிக்கிடம் இந்த அமர்வை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அசாத் கைசர் தெரிவித்தார்.
இதையடுத்து அவையை வழிநடத்திய அயாஸ் சாதிக், மிகுந்த மரியாதையுடனும் எதிர்கட்சிகளுடன் இணைந்தும் அவையை இதுவரை வழிநடத்தி வந்ததற்காக அசாத் கைசருக்கு நன்றி தெரிவித்தார்.
காலையில் கூட்டப்படும் அவை, நள்ளிரவைக் கடந்தும்
உச்ச நீதிமன்றத்தை நள்ளிரவில் திறக்க நடவடிக்கை
முன்னதாக, பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த தேசிய அவையில் சபாநாயகர் அசாத் கைசர் இன்னும் அனுமதிக்காததால், உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை சனிக்கிழமை நள்ளிரவைக் கடந்த இரவு 12 மணிக்கு திறக்க பாகிஸ்தான் தலைமை நீதிபதி முடிவு செய்தார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்றமான தேசிய அவையின் அமர்வு இரவு 9:30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது, சனிக்கிழமை மட்டும் நான்கு முறை நாடாளுமன்ற அலுவல் ஒத்திவைக்கப்பட்டது.
342 இடங்கள் கொண்ட சட்டசபையில் 172 உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு இருப்பதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சி கூறியது.
இந்த அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சனிக்கிழமை இரவு 11:14 மணி நிலவரப்படி அந்நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அட்டால் பண்டியால், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தை அடைந்தார்.
இதற்கு இடையே, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா, பிரதமர் இல்லத்தில் இம்ரான் கானைச் சந்தித்தார். பிறகு அவர் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து தமது தனி குடியிருப்புக்கு சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.


Post a Comment
Post a Comment