போராட்டக்காரர்களால் நிரம்பியது காலிமுகத்திடல்




 அரசாங்கத்திற்கு எதிராகவும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு கோரியும் தற்போது காலிமுகத்திடலில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள் வருகைத்தந்த வண்ணம் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டக்காரர்கள் அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.