ஊரடங்கு




 (சுகிர்தகுமார் )


  நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நேற்று மாலை முதல் அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அக்கரைப்பற்று நகரத்தின் வியாபார நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தன.
அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் மூடப்பட்டிருந்ததுடன் பொதுப்போக்குவரத்து நடவடிக்கைளும் முற்றாக தடைப்பட்டிருந்தன.
இந்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் கருதி நகரத்தின் உட்பிரதேசங்களில் சில சிறிய வியாபார நிலையங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் திறந்திருந்தன.
பொதுமக்களின் போக்குவரத்து செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
இதேநேரம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட ஒரு சில விவசாயிகளும் வயல் பிரதேசங்களுக்கு சென்றதையும்; அவதானிக்க முடிந்தது.
எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அக்கரைப்பற்றில் ஊரடங்கு சட்டம் தொடரும் நிலையில் பாதுகாப்பு தரப்பினரின் நடமாட்டம் குறைந்தளவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.