வி.சுகிர்தகுமார்
ஒவ்வொரு ஆலயத்திற்கும் சென்று முன்னெடுக்கும் கூட்டுப்பிரார்த்தனை வழிபாடுகளை மனதார பாராட்டுகின்றேன். அதுபோல் சமூகத்தை விழிப்பூட்டக்கூடிய சமய கதாப்பிரசங்கங்களையும் ஒவ்வொரு ஆலயத்திலும் முன்னெடுத்துச் செல்லுங்கள் எனும் பணிவான வேண்டுகோளையும் முன்வைக்கின்றேன் என அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப்பிரார்த்தனை சபையின் முதலாவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
சபையின் தலைவர் பெ.சண்முகத்தின் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதிகளின் ஒருவராக கலந்து கொண்டதுடன் அருளாளராக சபையின் ஆலோசகரும் கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய பிரதம குருவுமான சிவஸ்ரீ சீ.கு.கௌரிசங்கர் குருக்கள் கோளாவில் ஸ்ரீ கண்ணகிஅம்மன் ஆலய கப்புகனார் பூபாலபிள்ளை விசேட அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அனுசியா சேனாதிராஜா கலாசார உத்தியோகத்தர் நிசாந்தினி தேவராஜ் பிரதேச ஊடகவியலாளர் வி.சுகிர்தகுமார் ஆலய தலைவர் நா.ஏரம்பமூர்த்தி கிராம உத்தியோகத்தர் இ.சுமணாரதி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ட.சாமினி ஓய்வுநிலை அதிபரும் சபையின் முன்னாள் தலைவருமான பெ.தணிகாசலம் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் க.கண்ணதாசன் ஆலையடிவேம்பு வர்த்தக சங்க தலைவர் ஆர்.ஜெகநாதன் நான்கு குடி வண்ணக்குமார் கூட்டுப்பிரார்த்தனை சபை உறுப்பினர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வருகை தந்த அதிதிகள் கூட்டுப்பிரார்த்தனை சபையினரால் வரவேற்க்கப்பட்டனர். பின்னர் மங்கள விளக்கேற்றலும் இறைவழிபாடும் தமிழ் மொழி வாழ்த்துப்பாவும் பாடப்பட்டது.
இதன் பின்னராக வரவேற்புரையினை சபையின் உதவிச்செயலாளர் வே.சிவபாக்கியம் வழங்க தலைமையுரையினை செயலாளர் சௌ.மிதுர்ஷன் ஆற்றினார்.
தொடர்ந்து அதிதிகளினது உரை இடம்பெற்றதுடன் அனைவரும் கூட்டுப்பிரார்த்தனை சபையின் இறைபணி தொடர்பில் பாராட்டி பேசினர். தொடர்ந்தும் இச்சபையினை முறையாக வழிநடத்த பல்வேறு உதவிகளை வழங்குவதாகவும் உறுதி அளித்தனர்.
இதேநேரம் நிகழ்வில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசுப்பொதிகளும் கோளாவில் கலைவாணி கல்லூரியின் முகாமையாளர் டிலோஜனின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது சபையின் தலைவர் சேவையை பாராட்டி கலாசார உத்தியோகத்தர் நிசாந்தினி தேவராஜினால் அப்பர் சுவாமிகளின் உருவப்படம் வழங்கி வைக்கப்பட்டமை சிறப்பம்சமாக அமைந்தது.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தவராசா கலையரசன் இந்த நாட்டிலே மிக நீண்டகாலமாக வாழ்கின்ற எமது இனத்திற்குரிய அந்தஸ்து இதுவரை கிடைக்கவில்லை. ஆலயங்களின் வரலாறுகள் அழிக்கப்படுகின்றன. இதுவே இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. பெரும்பான்மை சமூகத்தின் வாக்கில் வெற்றி பெற்றவன் நான் என்ற எண்ணத்துடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவருக்கு இன்று நாலாபக்கமும் எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளது. இன்று இந்த நாட்டை அழித்த தலைவராக சகல சமூகங்களாலும் அவர் பார்க்கப்படுகின்றார் என்றார்.
இங்கு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இன்று பிள்ளைகள் பல்வேறு சமூக சீர்கேடான சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சந்;;தர்ப்பத்தில் இதுபோன்ற கூட்டுப்பிரார்த்தனை சபைகளின் இறைசேவை அளப்பரியது. இதன் மூலம் சமூகத்தை ஒழுக்கமுள்ள சமூகமாக மாற்ற முடியும். பெற்றோர்கள் பிள்ளைகளை சரியான வழியி;ல் கொண்டு செல்லவும் இச்சபை உதவுகின்றது என்றார். ஆகவே இச்சபையினை வழிநடத்த தன்னால் முடிந்த உதவிகள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் கூறினார்.
இதேநேரம் கடந்த தேர்தலில் திட்டமிடப்பட்டு தேர்தல் களத்தில் சில நபர்கள் இறக்கப்பட்டனர். அதன் காரணமாக அம்பாரை மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டது. ஆயினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை அம்பாரை மாவட்ட மக்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக தேசிய பட்டியல் உறுப்புரிமையை வழங்கி மாவட்ட மக்களை காப்பாற்றியது. அதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு நன்றி சொல்கின்றேன். ஆனாலும் இந்த வரலாற்று தவறை மக்கள் எதிர்காலத்தில் விடாமல் ஒன்றாக பயணித்து தமிழர்கள் உரிமையை பாதுகாப்பது இங்கு வாழும் மக்களின் கடமை எனவும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment
Post a Comment