பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு சட்ட கல்லூரி மாணவர் சங்கம் கோரிக்கை



 


பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு  சட்ட கல்லூரி மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது


சட்டத்தரணிகள் பரீட்சை - அக்டோபர் 2021/ஏப்ரல் 2022 திட்டமிட்டபடி நடத்துவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை சட்டக்கல்லூரியின் அதிபரிடம் இலங்கை சட்ட மாணவர்கள் ஒன்றியம் கோரியுள்ளது.


மே 4, 2022 தேதியிட்ட சட்டக் கல்லூரியின் அறிவிப்பின்படி, கலந்து கொள்ள முடியாத மாணவர்கள் தேர்வில் இருந்து விலகி, 6 மாத காலத்திற்குப் பிறகு நடைபெறும் அடுத்த அமர்வில் தேர்வை மீண்டும் எழுத வேண்டும் என்று மாணவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


 நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மாணவர்களின் போக்குவரத்து மற்றும் தங்கும் பிரச்சினைகள் மற்றும் உணவு பிரச்சினைகளை தீர்க்க, இரண்டு வார கால அவகாசம் மற்றும் பிற தேவையான ஏற்பாடுகளை செய்ய, கோரிக்கை விடுக்கப்படுவதாக, ஆன்லைனில் கையெழுத்திட்ட மனுவில், மாணவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.