மண்டூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மன்றத்தினால், இலண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதியுதவி மூலமாக தந்தையை இழந்த ஏழைச் சிறார்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வும், சத்சங்கமும் நேற்று மன்றத் தலைவர் கு.ஜதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகராஜ் , மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் உதவிப் பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மகராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
முதலில் சுவாமிகளால் பஜனை சொற்பொழிவுகளுடன் சத்சங்கம் நடாத்தப்பட்டது.
பின்னர் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


Post a Comment
Post a Comment