கைத்தொலைபேசிக் கள்வர்கள் கைது




 யாழ்ப்பாணத்தில் கடந்த 3 மாதங்களாக கைத்தொலைபேசிகளை திருடிய மூவர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.