வி.சுகிர்தகுமார்
தமிழ் மக்களின் இருப்பையும் உரிமை சார்ந்த விடயங்களையும் பாதுகாக்கின்ற செயற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகள் ஈடுபடவேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் புதிய ஜனாதிபதி தேர்வு தொடர்பாக அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வடகிழக்கிலே தமிழ் மக்களின் இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் புரையோடிப்போயுள்ளது. குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் உள்ள தமிழ்மக்களின் இருப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் முன்வைக்கப்படும் கோரிக்கைகளில் உள்ளடக்கப்படவேண்டும்.
அதிகாரங்கள் மறுக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வருகின்ற ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் தொல்லியல் எனும் போர்வையில் அத்து மீறி பறிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் கட்சிகளும் கவனமெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இவ்விரு கோரிக்கைகளுமே அம்பாரை மாவட்ட மக்களின் பிரதான இரு முக்கிய கோரிக்கைகாக உள்ளதாகவும்; குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் அராஜகங்களை மேற்கொண்டு பொருளாதார ரீதியாகவும் சீரழித்ததுடன்; எமது சிறுபான்மை இனத்தின் இருப்பை அழிப்பதற்காகவும் மத ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்து எமது இனத்தின் அடையாளத்தை அழிப்பதற்காக செயற்பட்ட மிக மோசமான ஒரு ஜனாதிபதி சிங்கள தமிழ் முஸ்லிம் என அனைத்து மக்களினாலும் துரத்தியடிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்; புதிய ஜனாதிபதியை தேர்வு செய்கின்ற சந்தர்ப்பம் தற்போது வந்திருக்கின்றது. இதேநரம் புதிய ஒரு ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அனைத்து பாராளுமன்ற பிரதிநிதிகளினதும் ஆதரவும் தேவைப்படுகின்றது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் கட்சிகளும் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தோடு தேர்தல் காலத்தில் மட்டும் வந்து வாக்குறுதிகளை மட்டும் வழங்கி விட்டு செல்லும் பெரும்பான்மை கட்சிகளோடு இணைந்து பயணிக்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
வேட்புமனுத்தாக்கல் இடம்பெறவுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க டளஸ் அழகப்பெரும எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க போன்றவர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.இந்நிலையி ல் தமிழ் பரப்பில் இருக்கின்ற தமிழ் தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்ட கட்சிகள் அத்தோடு தமிழர் நலன் சார்ந்து செயற்படுகின்ற தமிழ் தேசிய பரப்பிற்கு அப்பால் இருக்கின்ற மலையக கட்சிகள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பது முக்கியமானதொன்றாக இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.
சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் புதிய ஜனாதிபதி தேர்வு தொடர்பாக அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வடகிழக்கிலே தமிழ் மக்களின் இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் புரையோடிப்போயுள்ளது. குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் உள்ள தமிழ்மக்களின் இருப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் முன்வைக்கப்படும் கோரிக்கைகளில் உள்ளடக்கப்படவேண்டும்.
அதிகாரங்கள் மறுக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் வருகின்ற ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் தொல்லியல் எனும் போர்வையில் அத்து மீறி பறிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் கட்சிகளும் கவனமெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இவ்விரு கோரிக்கைகளுமே அம்பாரை மாவட்ட மக்களின் பிரதான இரு முக்கிய கோரிக்கைகாக உள்ளதாகவும்; குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் அராஜகங்களை மேற்கொண்டு பொருளாதார ரீதியாகவும் சீரழித்ததுடன்; எமது சிறுபான்மை இனத்தின் இருப்பை அழிப்பதற்காகவும் மத ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்து எமது இனத்தின் அடையாளத்தை அழிப்பதற்காக செயற்பட்ட மிக மோசமான ஒரு ஜனாதிபதி சிங்கள தமிழ் முஸ்லிம் என அனைத்து மக்களினாலும் துரத்தியடிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்; புதிய ஜனாதிபதியை தேர்வு செய்கின்ற சந்தர்ப்பம் தற்போது வந்திருக்கின்றது. இதேநரம் புதிய ஒரு ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அனைத்து பாராளுமன்ற பிரதிநிதிகளினதும் ஆதரவும் தேவைப்படுகின்றது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் கட்சிகளும் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தோடு தேர்தல் காலத்தில் மட்டும் வந்து வாக்குறுதிகளை மட்டும் வழங்கி விட்டு செல்லும் பெரும்பான்மை கட்சிகளோடு இணைந்து பயணிக்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
வேட்புமனுத்தாக்கல் இடம்பெறவுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க டளஸ் அழகப்பெரும எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க போன்றவர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.இந்நிலையி

Post a Comment
Post a Comment