சிலிண்டர்கள் வழங்கப்பட்டன



 



வி.சுகிர்தகுமார் 

  இரு மாதங்களுக்கு பின்னர் ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தில் நேற்று லிற்றோ எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் கிடைத்த தகவலை பிற்பகல் முதல் குறித்த இடத்தில் காத்திருந்த மக்கள் நேற்று எரிவாயு சிலிண்டர்களை பெற்றுச் சென்றனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரின் மேற்பார்வையோடு இராணுவத்தினரின் பூரண பங்களிப்புடன் லிற்றோ காஸ் நிலைய ஊழியர்களால் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் அமைதியான முறையில் இடம்பெற்றது.
இதன்போது  12.5 கிலோ எரிவாயு 500 சிலிண்டர்களும்; 5 கிலோ எரிவாயு 50 சிலிண்டர்களும் 2.5 கிலோ எரிவாயு 50 சிலிண்டர்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் பிரகாரம் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்கள் 5270 ரூபாவிற்கும் 5 கிலோ எரிவாயு சிலிண்டர்கள் 2200 ரூபாவிற்கும் வழங்கி வைக்கப்பட்ட நிலையில் சிலின்டர்கள் பெறுகின்றவர்களிடம் இருந்து மே மாத மின்சாரக்கட்டணப்பட்டியல் பெறப்பட்டு அதில் குறித்த வீட்டிற்கு சிலிண்டர்கள் வழங்கப்பட்டதை உறுதி செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் ஒரு வீட்டிற்கு இரு சிலிண்டர்கள் வழங்கப்படும் செயற்பாடு கட்டுப்படுத்தப்படவுள்ளது.
இதேநேரம் 500 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்கள்; வழங்கப்பட்ட நிலையில் இன்னும் பலர் எரிவாயு சிலின்டர்களை பெற காத்திருக்கின்றனர்.
ஆயினும் இதுவரையில் ஆலையடிவேம்பு மக்கள் அமைதியான முறையில் சகல செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.