வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் ஆனிப்பௌர்ணமி மகோற்சவத்தை முன்னிட்டதான பிராயச்சித்த கும்பாபிசேகமும் ஆலயத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட சிவன் அம்பாளின் உற்சவகால மூர்த்திகளுக்கான நூதன ஏக பட்ச கும்பாபிசேக விசேட யாக பூஜைகளும் இன்று இடம்பெற்றது.
ஆலயத்தில் கடந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகோற்சவம் இடம்பெறாத நிலையில் பிராயச்சித்த கும்பாபிசேகத்தின் பின்னர் இவ்வருடம் மகோற்சவம் இடம்பெறவுள்ளது.
இதன் பிரகாரம் பிராயச்சித்த கும்பாபிசேக யாகபூஜைகள் நடைபெற்று பிரதான கும்பம் உள்வீதிவலமாக எடுத்துவரப்பட்டு மூலமூர்த்தவர் மீது சொரியப்பட்டு பிராயச்சித்த கும்பாபிசேகம் நடைபெற்றது.
இந்நிலையில் ஹட்டன் டிக்கோயா நகரை சேர்ந்தவரும் அவுஸ்திரேலியா நாட்டில் வசிப்பவருமான தங்கவேலு நவராஜூ தனது நேர்த்தியின் நிமித்தம் ஜம்பொன்னிலாலான சிவன் அம்பாள் உற்சவகால மூர்த்திகளை ஆலயத்தில் இன்று ஒப்படைத்த நிலையில் அம்மூர்த்திகளுக்கான பூஜைகளும் விசேடமாக இடம்பெற்றது.
இதன்போது புதிதாக கொண்டுவரப்பட்ட சிவன் அம்பாளின் உற்சவகால மூர்த்திகளுக்கு தான்னியாதி வாசம் எனும் நெல் சொரியும் நிகழ்வும் ஜலாதி வாசம் எனும் நீர் சொரியும்;; நிகழ்வும் நயனோ மீலனம் எனும் கண் திறக்கும் கிரியைகளும் இடம்பெற்றது.
தொடர்ந்து பிரதான கும்பம் உள்வீதி வலமாக எடுத்தவரப்பட்டு சிவன் அம்பாளின் உற்சவகால மூர்த்திகளின் மீது சொரியப்பட்டதுடன் விசேட பூஜைகளும் இடம்பெற்றது.
ஆலயத்தலைவர் வி.சுகிர்தகுமார் தலைமையில் இடம்பெற்ற மகோற்சவத்தின் பிரயாச்சித்த கும்பாபிசேக வழிபாட்டுக்கிரியைகள் யாவற்றையும் அக்கரைப்பற்று பகுதி ஆதினகுரு இலி பழனிவேல் குருக்கள் ஆசியுடன் கிரியாகிரம ஜோதி அலங்கார பூசனம் சிவாகமபானு அகோர சிவாச்சாரியார் சிவஸ்ரீP சு.சுதர்சன் குருக்கள் மற்றும் ஆலய குரு ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வருகின்றனர்.
இதேநேரம் வருடாந்த ஆனிப்பௌர்ணமி மகோற்சவத்தின் கொடியேற்றம் நாளை இடம்பெறுவதுடன் தீர்த்தோற்சவம் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment