இலைக்கஞ்சி வழங்கல்



  


(காரைதீவு   சகா)


கதிர்காம காட்டுப் பாதை வழியாக செல்லும் அடியார்களுக்கு, முதல் தரிப்பிடமான வாகுரவெட்டையில்( வண்ணாத்திர கிணற்றடி)  இலைக்கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.

பிரபல சமூக சேவையாளரும், காரைதீவு பிரதேச சபை தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

அவர் தலைமையிலான குழுவினர் காட்டுக்குள் இவ் இலைக்கஞ்சியை காய்ச்சி சுடச்சுட வழங்கினார்கள்.

முதல் கட்டமாக நடந்து களைப்புடன் வந்த அடியார்களுக்கு அது தேவார்மிதமாக இருந்தது எனப் பலரும் கூறினர்.

யாழ் கதிர்காம பாதயாத்திரை அடியார்களும் இதில் பங்கேற்றார்கள்.