கவிஞர் பாலமுனை பாரூக் அவர்களுக்கு,புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் ஞாபகார்த்த ) விருது






தமிழின் ஆற்றல்மிகு ஆளுமைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் வென்மேரி 2021-2022 விருதுகள் பெருவிழா  நேற்று(17-08-2022) யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில், விருதுத் தேர்வுக்குழுத் தலைவர் முதுநிலைப் பேராசிரியர் சிதம்பரப்பிள்ளை சிவலிங்க ராஜா அவர்கள் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.


கவிதை,இலக்கியத் துறையில்  வாழ்நாள் சாதனையாளர் (புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன்  ஞாபகார்த்த ) விருது,  கவிஞர் பாலமுனை பாரூக் அவர்களுக்கு வழங்கப்பட்டது

பொன்னாடை, நினைவுச்சின்னம்,பொற்கிழி என்பன  கவிஞருக்கு வழங்கப்பட்டு இந் நிகழ்வில் அவர் கௌரவிக்கப்பட்டார்.