உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக நீதிபதிகள் மற்றும் ஏனைய நீதித்துறை அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் ரயர்களையும் திருடிய நபர் ஒருவரை வாழைத்தோட்ட பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் கெஸ்பேவ பிரதேசத்தை தற்காலிக வசிப்பிடமாக கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வந்து வாகனங்களின் ரயர்களை திருடிச் சென்றதுடன், திருடப்பட்ட டயர்களுக்குப் பதிலாக பழுதடைந்த ரயர்களைப்
பொருத்தியமையும் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு கமரா மூலம் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதுடன்,அவர் நேற்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


Post a Comment
Post a Comment