தமிழ்மொழி தினம், திருத்தப்பட்ட திகதிகள்




( காரைதீவு சகா)
 சமகால நிலைமையை கருத்திக் கொண்டு அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டிகள் நடத்தப்படவேண்டிய  திருத்தப்பட்ட திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

 அதற்கு அமைவாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி என் புள்ளநாயகம் கிழக்கு மாகாணத்தில் போட்டிகள் நடத்தப்படுவதற்கான திருத்தப்பட்ட  திகதிகள் தொடர்பாக சகல  வலய கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவித்திருக்கின்றார்.

 இதன்படி சகல வலையமட்ட தமிழ் மொழி தின போட்டிகளும் எதிர்வரும் 29 ஆம் தேதி இடையில் நடத்தப்பட வேண்டும். அதேபோன்று மாவட்ட மட்ட போட்டிகள் எதிர்வரும்  செப்டம்பர் மாதம் 4 தேதிக்கு இடையே நடத்தப்பட வேண்டும்.
கிழக்கு மாகாண மட்ட போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெறும்.
இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதிக் கிடையில் அனுப்பப் படவேண்டும்.



ஆனால்  எழுத்தாக்கபோட்டிகளுக்கான  வலய மட்டப்போட்டிக்கான  விண்ணப்ப முடிவு தேதி 20. 8 .2022 ஆகும்.

மாவட்ட மற்றும் மாகாண எழுத்தாக்க போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவு திகதி  11.09.2022 எனஅறிவிக்கப்பட்டு இருக்கின்றது.