நூருல் ஹுதா உமர்
தற்காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருகின்றது. கோவிட்-19 பெருந்தொற்றில் இருந்து உலகம் சிறிது சிறிதாக மீட்சியடைந்து கொண்டுவரும் இந்நிலையில் இப்பொருளாதார நெருக்கடியானது மேலும் பல நெருக்கடி மிக்க நிலமைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது.
பெருந் தொற்றினால் ஏற்கனவே பலவீனமடைந்துள்ள உலகப் பொருளாதாரமானது பல அதிர்ச்சியான தாக்குதல்களால் மேலும் பலவீனப்பட்டு வருகின்றது. எதிர்பார்த்ததை விட உலகளவில் உருவாகியுள்ள உயர் பணவீக்கம், உக்ரைன் போர், உணவு மற்றும் பண்டங்களின் விலையேற்றம், நிலவியல்சார்ந்த அரசியல், நிச்சமற்ற பொருளாதார நிலமைகள், வறுமை மற்றும் பட்டினி ஆபத்து போன்றன இதற்கான அடிப்படைக் காரணிகளாக அடையாளப்படுத்தலாம். இந்தக் காரணிகள் உலகப் பொருளாதாரத்தை வெறும் 3.1 வீத வளர்ச்சியை மாத்திரம் 2022 மற்றும் 2023 காலப்பகுதியில் எட்டலாம் என மீள்கணிப்புக்குள்ளாக்கியுள்ளன. இது 2022 ஜனவரியில் எதிர்வுகூறப்பட்டதிலிருந்து முறையே 0.9 மற்றும் 0.4 வீதம் குறைவானதாகும் என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர் தெரிவித்தார்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடம் கடந்த 28.09.2022 அன்று நடாத்திய 9ஆவது சர்வதேச ஆய்வு மாநாட்டில் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இதேவேளை எமது தாய்நாடான இலங்கைத் திருநாடு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. 1948இல் இலங்கை சுதந்திரமடைந்த போது ஆசியாவில் பலம்வாய்ந்த பொருளாதார மையங்களுள் ஒன்றாக அது இருந்தது. ஆனால் அதன் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சிப் பாதையையே கடந்து வந்துள்ளது.
இலங்கையில் காணப்படுகின்ற தற்போதைய இக்கட்டான பொருளாதார நிலைமை, பல வருடங்களாக தொடர்ந்து வந்துள்ள திறமையற்ற முகாமைத்துவம், ஊழல், தூரநோக்கற்ற கொள்கையாக்கம், நல்லாட்சிக்கான மூலக்கூறுகளை இழந்தமை போன்றனவற்றின் விளைவாகும். இலங்கை மத்திய வங்கியில் வெளிநாட்டு நாணய ஒதுக்கத்தின் பற்றாக்குறை மற்றும் சர்வதேச மூலதனச் சந்தையில் நுழைய முடியாது போனமை என்பன வரலாற்றில் என்றுமே காணாத கடன்சுமைக்கு வழிவகுத்துள்ளது. சரியாக முகாமைப்படுத்தப்படாத கடன்கள், வரிவிலக்கு என்பன வரவுசெலவுத்திட்டத்தில் இருக்கின்ற துண்டுவிழும் தொகையை மேலும் விரிவுபடுத்தியுள்ளன. இரசாயன உர இறக்குமதித் தடை மற்றும் திடீரென இலங்கை ரூபாவை மிதக்கவிட்டமை போன்றன இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாயின. இந்நாட்டின் பிரதான வருமான மூலங்களான உல்லாசப் பயணத்துறையும் ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதியும் அண்மைக்காலமாக 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள், அவற்றைத் தொடர்ந்து 2020இல் ஏற்பட்ட கோவிட்-19 போன்ற உள்ளக மற்றும் வெளியகக் காரணங்களினால் பாதிப்படைந்துள்ளன.

Post a Comment
Post a Comment