நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய கல்முனை அல்-பஹ்ரியா தேசிய பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டுவிழாவும் மாணவத் தலைவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும் பாடசாலை அதிபர் எம்.பைசால் தலைமையில் .பாடசாலை கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.
ஒழுக்காற்றுக் குழுவுக்கான பொறுப்பாசிரியர் லாபிர் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக கல்முனை கோட்ட கல்வி அதிகாரிவீ.எம். ஸம்ஸம் கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்வில் மாணவத் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான சின்னம் சூட்டப்பட்டதுடன் மாணவத் தலைவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஒழுக்காற்று குழு ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் பழைய மாணவர் சங்க செயலாளர்எம்.ஐ.எம். ஜிப்ரி, பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பாடசாலை கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்


Post a Comment
Post a Comment