சாதித்த மாணவிகளை சந்தித்தார் கல்லூரி அதிபர்



 


( காரைதீவு  நிருபர் சகா)


காரைதீவு விபுலானந்தா  தேசிய பாடசாலையில் இம்முறை தெரிவு செய்யப்பட்ட சாதனை மாணவிகளை கல்லூரி அதிபர் ம.சுந்தரராஜன் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
இச் சந்திப்பு நேற்று பாடசாலையில் நடைபெற்றது.

 க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி 4 மாணவிகள் மருத்துவ துறைக்கும், ஒரு மாணவி பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டமை தெரிந்ததே.

 மாணவிகளான லோகநாதன் புவித்ரா, சகாதேவராஜா டிவானுஜா, தங்கவடிவேல் டயானு ஆகியோர் 3 ஏ சித்திகளையும், ராஜேஸ்வரன் கம்ஷாயினி இரண்டு ஏ ஒரு பி சித்திகளையும் பெற்று மருத்துவத்துறைக்கும்,
ரஜிநாதன் துர்க்கா மூன்று ஏ சித்திகள் பெற்று பொறியியல் துறைக்கும் தெரிவாகியிருந்தார்கள். 

இந்த ஐந்து மாணவிகளை வரவழைத்து அளவளாவி பாராட்டு தெரிவித்தார் அதிபர்.

பாடசாலைக்கும் ,ஊருக்கும் பெருமை சேர்த்த அனைத்து மாணவர்களுக்கும் வெகுவிரைவில் பாராட்டு விழா நடாத்த திட்டமிட்டுள்ளதாக அதிபர் தெரிவித்தார்.