வி.சுகிர்தகுமார்
தமிழ் பிரதேசங்களில் பொலிசார் தமது கடமைகளை செவ்வனே செய்வதில்லை. இலஞ்சம் ஊழலுக்குள் அவர்கள் அகப்பட்டு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் விடயங்களில் ஒதுங்கி நிற்கின்றனர் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே தமிழ் பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.

அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா அக்கரைப்பற்று விபுலானந்தா இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
சீரற்ற காலநிலை காரணமாக இல்லத்தின் உள்ளக மண்டபத்தில் இல்லத்தின் ஸ்தாபகரும் இந்து இளைஞர் மன்ற தலைவருமான இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கலந்து கொண்டார்.

இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதன் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் அதிகமான இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் இங்கு வாழும் இளைஞர்களை போதைப்பொருளால் அழிக்கும் முயற்சி திட்டமிட்டு செயற்படுத்தப்படுகின்றது.
இதனை நிறுத்தவேண்டிய பொறுப்பு ஆரம்பத்தில் பெற்றோர்களுக்கு இருந்தாலும் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டவேண்டிய பொறுப்பு பொலிசாருக்கு உள்ளது. ஆகவே பொலிசார் பொறுப்புடன் செயற்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் நிலையில்லாமல் இருக்கும் அரசு தங்களது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என செயற்படுகிறதே தவிர தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கும் சில விடயங்களை பேச்சளவில் பேசினாலும் நடைமுறையில் இல்லாத சூழல் உள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இவ்வாறான சூழலில்; ஆலையடிவேம்பு பிரதேச சபை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இல்லாமையும் இங்கு பலவீனமான அரசியல் இடம்பெறுவதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஆகவே சமூகத்தின் பால் அக்கறை கொண்ட நல்லதொரு பிரதேச சபையினை எதிர்காலத்தில் உருவாக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

சிறந்த ஒழுக்கமுள்ள பிரஜைகளை உருவாக்கும் முயற்சியில் பலவருடகாலமாக உழைத்துவரும் அக்கரைப்பற்று விபுலானந்தா பாலர் பாடசாலை நிலையத்தின் முகாமையாளர் ஆசிரியர்கள் இந்து இளைஞர் மன்றத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.
நிகழ்வில் விசேட அதிதிகளாக திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தலைவர் வி.பரமசிங்கம் வைத்தியர் கிருசாந்தி இந்து இளைஞர் மன்றத்தின் உப தலைவர்களான க.கிருஸ்ணமூர்த்தி மற்றும் எஸ்.புண்ணியமூர்த்தி மன்றத்தின் செயலாளர் செல்வானந்தம் பொருளாளர் வி.சுகிர்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிதிகள் வரவேற்க்கப்பட்டதுடன் குத்துவிளக்கேற்றலும் பாலர் பாடசாலை மாணவிகளின் இறைவணக்கமும் இடம்பெற்றது.
இதன் பி;ன்னராக மாணவர்களின் விளையாட்டு நிகழவுகள் ஆரம்பமானது. மாணவச்செல்வங்களின் சுவராசிய மிகு விளையாட்டு நிகழ்வுகள் அனைவரையும் மகிழ்சிப்படுத்தியது. இதற்கு மேலாக மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி அனைவரையும் வெகுவாக ஈர்த்ததுடன் பார்வையாளர்களின் பாராட்டினையும் பெற்றுக்கொண்டது.
இதற்கு பாடுபட்டுழைத்த ஆசிரியர்களின் அர்ப்பணி;;ப்பான சேவைக்கு வாழ்த்துகளும் வழங்கப்பட்டன.
நிறைவாக போட்டியில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களுக்கும் நினைவுச்சின்னமும் பரிசுப்பொதியும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

Post a Comment
Post a Comment